புதன், 18 ஜனவரி, 2012

முழுக்காதன் குலதெய்வம் வெள்ளையம்மாள் கதை


 
தமிழ்நாட்டில் கொங்குநாட்டு பகுதியில் உள்ள  காங்கயம் என்ற ஊருக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள ஒரு பெரும் சம்சாரிக்கு (விவசாயிக்கு) நான்கு மகன்களும் ஒரு பெண்ணும் பிறந்தார்கள். பெண் குழந்தை பிறவியிலேயே வெளுத்திருந்தாள். அவளை வெள்ளையம்மாள் என்று பெயரிட்டு அழைத்தார்கள்.  பெண் வளர்ந்து கல்யாணம் கட்டும் வயசை நெருங்கினாள்.  சம்ச்சரியும் அவர் மனைவியும் பொண்ணு கல்யாணத்தை நெனச்சு ரொம்ப விசனப்பட்டார்கள்.

அவுக பண்ணையிலே மாடு மேக்கிறதுக்கு தூர தேசத்திலிருந்து ஒரு இளந்தாரி வந்து வேலைல  சேந்தான். அவனும் அவுக சாதிய சேந்தவன் தான். ஆனா பணங்காசு இல்லாத பய. வெள்ளையம்மாளின் அய்யன் (தந்தை) அந்த மாடு மேக்கறவனுக்கே தம்   பொண்ணக்  கல்லாணங் கட்டிக்கொடுக்கலான்னு  முடிவு செஞ்சார். நெனச்ச உடனேயே அய்யன் பையனோட ஊருக்குச் போயி அவுக தாய்தகப்பன்கிட்ட பேசி சம்மதிக்க வச்சார். கண்ணாலமும் நடந்துச்சு. வெள்ளையம்மாளும்  மூனு புள்ளைக்குத் தாயானா. 

பின்னால  வெள்ளயம்மாளோட அண்ணன்மார்களுக்கும்  கண்ணாலம் நடந்துச்சு.  எல்லாரும் ஒண்ணா கூட்டுக் குடும்பமாக இருந்தாக. கொஞ்ச காலத்துக்கு அப்புறம் வெள்ளையம்மாளின் அய்யனுக்கு அந்திம காலம் நெருங்கிடுச்சு. அப்போது அவரு  தம் புள்ளைகளைக் கூப்டு, வெள்ளையம்மாளுக்கு ஒரு காணி நிலம் குடுத்தடச்   சொல்லிட்டு உயிரை விட்டாரு.  

வெள்ளையம்மாள் தன்னோட  மூனு கொழந்தைகளயும் கூட்டிக்கிட்டு  எங்க போறதுன்னு  தெரியாம மனம்போன போக்குல போனபோது, ஒரு சர்தாரு   (அந்நாளைய முஸ்லிம் அரசாங்க உயர் அதிகாரி)  குதிரமேல வர்ரதக்கண்டு அஞ்சி புதரில் ஒதுங்கினா. சர்தார் இவளைப்பாரத்தவுடன நின்னு விசாரிச்சு  இவ அனாத நெலமயைக் கண்டு இரக்கப்பட்டரு . நானு  இப்போ வரி வசூலுக்காக அவசரமாப் போயிக்கிட்டிருக்கிறேன். திரும்பி வந்ததும் உன்னுடைய கஷ்டத்த தீத்து வக்கிறேன்ன்னாரு. அதுவரை பக்கத்தில இருக்கும் கோட்டைல பத்திரமா இருன்னுஆறுதல் சொல்லி, அவளக் கோட்டைல  தங்க ஏற்பாடு பண்ணிட்டு, வரி வசூலிக்கப் போயிட்டான்.

இதக்கேட்ட வெள்ளையம்மாள நான் கடவுள் சாட்சியா எந்தத் தப்பும் செய்யல. இதை எங்கே  வேணும்னாலும்  சத்தியம் செய்வேன் னு  சொன்னா. அப்போ அவ அண்ணன்மார்கள் அவுக  பெண்டாட்டிங்க பேச்சக் கேட்டுக்கிட்டு , வெள்ளையம்மாள் மூனு  சத்தியம்  செஞ்சா   நாங்க எங்க நெலம் எல்லாவத்தையும்  வெள்ளையம்மாளுக்கே குடுத்துடறோம், அப்படிச் செய்யாட்டா இவ தீக்குளிக்கனும்னு  சொன்னாக. அந்த சத்தியங்க என்னன்னா:

காளமாட்டை  ஏரிலோ அல்லது வண்டியிலோ பூட்டிவதற்கு   வெடத்தலாமரத்தில் நுகத்தடி செஞ்சு வச்சிருப்பாங்க. இது நல்லா முத்தி காய்ந்திருக்கும். அந்த நுகத்தடியை மண்ணில் நட்டு தண்ணி  ஊத்தினா  அது துளிர் விடனும்.

அந்த ஊர்க்கோவிலில் நிறுத்தியிருக்கும் மண் குதிரக்கு தண்ணி தெளிச்சா அது தலயக் குலுக்கி கனைக்கனும்.

இதுக்கு தேவையான வேண்டிய தண்ணிய சுடாத பச்சை மண் கொடத்தில எடுத்து வரனும. அப்போ அந்த மண்குடம் கரையாம இருக்கனும.

இதக்கேட்ட சர்தார் வெள்ளையம்மாளிடம் இவுக  உன்னக் கொல்லப் பார்க்கறாங்க. நீ இதுக்கு ஒப்புக்காதேன்னு சொன்னாரு. ஆனா வெள்ளையம்மாளோ, நானு  பதிவிரதங்கிறது உண்மை, இதனாலே நான் சத்தியஞ் செய்யரேன்னு சொன்னா. அப்படியே ஒரு நுகத்தடி கொண்டு வந்தா. கொடம் கரையாமல் நின்னுசசு. அந்தக் கொடத்தில இருந்து தண்ணிய  நுகத்தடிக்கு ஊத்த  அந்த நுகத்தடில தளிரு  துளித்துச்சு. மீதம் இருந்த தண்ணிய அங்கிருந்த மண் குதிர மேல தெளிக்க, அந்தக் குதிரயும்  தலயை ஆட்டி கனைச்சுச்சு . இதைப் பாத்த எல்லாரும் அதிசயப்பட்டுப் போனாங்க . வெள்ளையம்மாளின் அண்ணன்மார்கள் நால்வரும் சர்தாரிடம் வந்து எங்கள் சொத்து எல்லாத்தையு வெள்ளையம்மாளுக்கே  குடுக்கிறோம்னு சொல்லி  ஊரவிட்டே போயிட்டாக. சர்தாரும் வெள்ளையம்மாளுக்கு வாழ்த்து சொல்லிட்டு தன் ஊருக்குப் போனாரு.

வெள்ளையம்மாள் பல காலம் தன் மக்களுடன் வாழ்ந்து விட்டு பின்னாடி  தெய்வமானா. அவளுடைய வம்சாவளிதான் தற்காலத்தில் வெள்ளாளக் கவுண்டர் இனத்தில் முழுக்காதன் குலம் என்று அழைக்கப்படுகிறார்கள்.

வெள்ளாளக் கவுண்டர்களில் முழுக்காதன்குலம் என்பது ஒரு பிரிவு. மற்ற பிரிவினரைக் காட்டிலும் இந்தக் குலத்துக்காரங்களுக்கு வெள்ளாள இனத்தில் ஜாஸ்த்தி  மதிப்பு உண்டு. காரணம் இவர்கள்தான் கல்யாணங்களில் சீர் செய்வதற்கு முன்னுரிமை பெற்றவர்கள்.

இந்த குலப்பெயர் வர்றதுக்கு காரணம் இந்தக் குலத்துக்காரங்க அவுக கொழந்தைகளுக்கு காது குத்தும்போது வெகு விமரிசையாக சீர் செய்துதான் காது குத்துவாங்க . ஆகவே இவுகளுக்குத்தான் காது முழுசானதா கருதப்படும். எனவே இவுக முழு காது உள்ளவங்கனு  பட்டம் பெற்றவர்கள். இப்படி இந்தக் குலத்துக்காரங்க முழுக்காதன் குலத்தவர்கள்சொல்றது உண்டு.

இந்தக் குலத்துக்கு  குலதெய்வம் வெள்ளையம்மாள் தான். இந்தத் தெய்வத்துக்கு  கோவை மாவட்டம் காங்கயம் பக்கத்தில காடையூரில் உள்ள பங்கசாக்ஷி சமேத காடையீஸ்வரர் கோவில்ல  தனி சந்நிதி இருக்கு . ஒவ்வொரு இனத்துக்காரங்க  குல தெய்வங்களுக்கும் ஒரு வரலாறு இருக்கு. இந்த வரலாறை   கர்ண பரம்பரைக் கதையா சொல்றாங்க. 

நன்றி: முழுக்காதன் குல வரலாறு பழனி.கந்தசாமி

1 கருத்து:

  1. காடையூர் கோவிலில் உள்ள தல வரலாறு, 10 -ல், தனக்கு உதவிய சர்தார் சார்ந்துள்ள இஸ்லாம் மதத்தினருக்கு நன்றி செலுத்தும் விதமாக, முஸ்லீம்கள் தங்கள் குழந்தைக்கு சுன்னத் செய்வது போல நமக்கு பிறக்கும் குழந்தைக்கு மொட்டையடித்து, காதுகுத்தி சீர் செய்வோம்" என உள்ளது. இதன் உள்ளடக்கம், முழுக்காதன் குலத்தில் பிறக்கும் குழந்தை காது குத்தும் வரை முஸ்லீம் குழந்தை போல இருக்கும், காது குத்தியவுடன் கவுண்டர் சமுதாயத்தில் சேரும் என்பதுதான்.

    பதிலளிநீக்கு