என்னைப் பற்றி

வணக்கம்!  என் பெயர் முத்துசாமி, சென்னை, தமிழ் நாடு. ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரி. என்னைப் பற்றி சொல்வதற்கு வேறு ஒன்றுமில்லை. ஏனெனில் இந்த தகவல்கள் உங்களுக்கு எந்த விதத்திலாவது பயண் தருமா? என்று தெரியவில்லை. மற்றபடி… 

குடும்ப தெய்வங்கள், சாதிய அடிப்படையிலான குல தெய்வங்கள், இனக்குழு சார்ந்த வெகுசன தெய்வங்கள் மற்றும் தொழில்களோடு  இணைந்த  வெகுசன தெய்வங்கள் ஆகியவை தெய்வங்களும் 'சிறு  தெய்வங்கள்' என்று பட்டியலிடலாம். 

காதல், குடும்பம், பாசம், வீரம், நாட்டுப்பற்று, தோல்வி, தியாகம்   போன்ற உணர்வுபூர்வமான நாட்டுப்புறவியல் கதைகள் இந்த சிறு தெய்வங்களின் பின்னணியில் உள்ளன. 

மானுடவியல், நாட்டாரியல், பண்பாட்டியியல் சார்ந்த ஆய்வுகளில் இந்த சிறு தெய்வங்களுக்கு உன்னதமான இடம் உள்ளது. 

நான் அறிந்த சில  நாட்டுப்புறவியல் இலக்கியங்களை இங்கே பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியும் திருப்தியுமடைகிறேன்.


என் மின்னஞ்சல் : iramuthusamy@gmail.com
செல்பேசி: + 91 9444441866